2017-03-14 15:43:00

கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்ட ஊடகவியலாளர்


மார்ச்,14,2017. மக்கள் தொடர்புத் துறையில் கிறிஸ்தவராகப் பணியாற்றுவது சவால் நிறைந்தது என்று, ஆசிய கிறிஸ்தவ செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

SIGNIS என்ற உலக கத்தோலிக்க மக்கள் தொடர்பு கழகம், மலேசியாவின், Selangor நகரில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட 13 ஆசிய நாடுகளின் ஏறக்குறைய இருபது செய்தியாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மலேசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் மையத்தில், கடந்த வாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, பாகிஸ்தான் நாட்டு கத்தோலிக்க செய்தியாளர் ஒருவர், பொதுவில் கத்தோலிக்க இதழ்களை விற்கவும், அடக்குமுறை பற்றிய நிகழ்வுகளை வெளியிடும்போது தனது பெயரைக் குறிப்பிடவும் முடிவதில்லை என்று கூறினார்.

சிறுபான்மை மதங்களைச் சார்ந்த ஊடகத்துறையினர், தங்களின் பணிகளை ஆற்றுகையில் தடைகளை எதிர்கொள்கின்றனர் எனவும், அச்செய்தியாளர் தெரிவித்தார்.

கிறிஸ்தவராக இருப்பதால், மக்கள் தொடர்புத் துறையில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என, செய்தியாளர்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.