ஜெயமோகன் புலம்புவதில் என்ன ஆச்சரியம்?

திராவிட இயக்க வரலாற்றினை பற்றி ஜெயமோகன் ஏதாவது திரித்து கூறாவிட்டால்தான் ஆச்சரியம்

அவர் புலம்புவதில் என்ன ஆச்சரியம்?

அதுவும் ஆரிய அடிமையான ராமசந்திரனை எப்படி விடலாம் என சொல்வதிலே அன்னாரின் நோக்கம் தெரியவில்லையா?

பெரியாரின் வாரிசு பழனிச்சாமி என சொல்ல விரும்புகின்றார் ஜெயமோகன் , அதில் அவருக்கொரு ஆனந்தம்

 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 08

Image may contain: sky, cloud and outdoorகடல் யுத்தத்தை தொடக்கினார் நெல்சன்

சிங்கத்தின் பலம் தரையில் என்றால், முதலையின் பலம் நீரில் என்பது போல பிரிட்டனின் பலம் முழுக்க அந்த கடற்படைதான்.

உலகம் முழுக்க அவர்கள் கட்டியாண்டதற்கு அந்த கடற்படை மிக அவசியமானதாக இருந்ததால், மிக வலுவாக வைத்திருந்தார்கள்

அதன் பலம் நீண்ட வரலாறுடையது. ஹிட்லரால் கூட அதனை வெல்ல முடியவில்லை. அப்படிபட்ட பிரிட்டன் கடற்படையுடன் தான் எகிப்து கரையில் நெப்போலியன் மோதினான்.

Image may contain: 1 person

 நெப்போலியனை மிரளவைத்த நெல்சன்

பிரிட்டிஷாரின் கப்பல்களும் அவர்களின் வியூகமும் மிக கடுமையாய் இருந்தன, அதிலும் நெல்சன் போக்கு காட்டி ஆடிய ஆட்டத்தில் நெப்போலியன் தடுமாறினான்

அதுவும் அது அவனுக்கு முதல் கடற்போர்.

நெப்போலியனும் நெல்சனை அசால்ட்டாக சமாளித்துகொண்டுதான் இருந்தான். ஆனால் கொம்பன் சுறா போன்ற பிரிட்டன் கடற்படையினை எதிர்கொள்ள அவனுக்கு மேலதிக படையும் பணமும் தேவைபட்டது

ஆனால் பிரான்ஸில் ஆண்டுகொண்டிருந்த டைரக்டர்ஸ் குழு அதனை புறந்தள்ளியது, இவ்வளவுதான் நிதி முடிந்தால் வெற்றியோடு வா , இல்லாவிட்டால் பிழைத்து வா, கஜானா காலி என பதில் அனுப்பிவிட்டார்கள்

வேறு வழியின்றி பின் வாங்கினான் நெப்போலியன், அவன் தொடர்ந்து எழுதிய கடிதங்களுக்கும் பலனில்லை

நெல்சன் நெப்போலியனின் கப்பல்படையினை நாசம் செய்தார், தந்திரத்தில் மிகுந்த நெப்போலியன் கப்பல்களை விட்டுவிட்டு அவரை கொல்ல முயற்சிக்க நெல்சனுக்கு ஒரு கண் போயிற்று

ஆனாலும் நெல்சனின் கட்டளைபடி போரிட்ட பிரிட்டன் படைகள் முன்னால் நெப்போலியனால் நிற்க முடியவில்லை

பிரிட்டனின் நீர்வழிதடத்தை தடுக்கும் அவனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. எகிப்து பக்கம் கரை ஒதுங்கினான் நெப்போலியன்

பின்னாளில் அவன் பிரிட்டன் மீது வெறியோடு அலைந்ததற்கும், இறுதிவரை பிரிட்டனின் கடற்படையினை எதிர்கொள்ள தயங்கியதற்கும் இதுதான் தொடக்கம்.

நெல்சனால் நெப்போலியனுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவால்தான் அவரால் திப்பு சுல்தானுக்கு உதவமுடியாமல் போனது

இருவரும் இணைந்தால் பேராபத்து என எண்ணிய பிரிட்டன், நெப்போலியனை முடக்கி, அதற்குள் திப்புவினையும் தீர்த்துகட்டியது

இதெற்கெல்லாம் காரணம் அந்த நெல்சன்.

எகிப்து பக்கம் திரும்பிய நெப்போலியன் சும்மா இருக்கவில்லை, அங்கிருந்து இன்றைய இஸ்ரேல், சிரியா வழியாக துருக்கி செல்ல முயற்சித்தான்

துருக்கிய சுல்தானோடு மோதினான் நெப்போலியன், மிக உக்கிரமான சண்டையில் அன்றைய பாலஸ்தீனத்தை வென்றான், அதிலிருந்த மிக பிரசித்திபெற்ற வியாபார கோட்டையான ஏகர் கோட்டை அவன் வசமாயிற்று

தொடர்ந்து முன்னேறினான், அவன் தாக்குதலில் சுல்தானிய படை பின் வாங்கியே இருந்தது. நெல்சனிடம் பெற்ற கடல் தோல்வியினை துருக்கி சுல்தானிடம் கோபமாக காட்டிகொண்டிருந்தான்

அப்பொழுது இரு விஷயங்கள் அவனுக்கு குறுக்கீடாக வந்தன‌

ஒன்று அவர் நிதி கேட்கும் பொழுதெல்லாம் அந்த பிரான்ஸ் டைரக்டர்ஸ் குழு மறுத்தே வந்தது, ஒரு கட்டத்தில் தோட்டாவினை சேமிக்க துப்பாக்கி முன்னிருந்த கத்தியால் எதிரிகளை கொடூரமாக கொன்றது நெப்போலியன் படை

இன்னொன்று யுத்த களத்தில் பரவிய பிளேக் நோய். நிதிதட்டுபாட்டை கூட சமாளித்த நெப்போலியனுக்கு பிளேக் நோய் பெரும் அச்சுறுத்தலானது

யுத்தத்தை நிறுத்தி தீரும் அவசியம் இருவருக்குமே இருந்தது.

இப்பொழுதும் எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் பிரான்ஸ் இருப்பை பலபடுத்த நிதி கேட்டான் நெப்போலியன், வழக்கம் போல கஜானா காலி, வீணான யுத்ததிற்கு பணம் தரமுடியாது என சொல்லிவிட்டார்கள்

அப்படி சொன்னாலும் கூட நெப்போலியனுக்கு கோபம் வந்திருக்காது ஆனால் இந்த வரியும் இருந்தது

“நெல்சனுடன் தோல்வி, இப்பொழுது ஆட்டோமான் துருக்கியருடனும் தோல்வி, உன்னை நம்பி பணம் கொட்டமாட்டோம்”

என்ன கொடுமை இது? நான் என்ன ஜோசப்பினுக்காகவா இந்த எகிப்தை எல்லாம் பிடித்தேன்? எல்லாம் பிரான்சுக்காக பின் ஏன் என்னை தோற்ற‌ ராணுவ அதிகாரி என்றே சொல்கின்றார்கள் என்ற கோபம் அவனுக்கு வந்தது

இத்தனைக்கும் பன்னீர் செல்வம் போல அவன் வைத்த அடிமைகள் அந்த டைரக்டர்கள், அதுவரை அடிமையாய் இருந்தவர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிட்டார்கள்

எகிப்தினை தன் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டு பிரான்ஸ் திரும்பினான் நெப்போலியன்

அங்கு நிலமை படுமோசமாக இருந்தது, எங்கும் சிக்கல், அரசு திணறியது

ஆண்டாண்டு காலமாக அரசனின் அதிகாரத்தில் இயங்கிய நாட்டில் திடீரென மக்களாட்சி சம உரிமை ஜனநாயகம் என மாற்றியபொழுது அதனை எப்படி நிர்வகிப்பதில் குழப்பம் என்பது நெப்போலியனுக்கு புரிந்தது

இனி பன்னீருக்கு பதில் பழனிச்சாமி என சசிகலா முடிவெடுத்தது போல முடிவெடுத்து கலகம் தொடங்கினான்

அந்த பழைய டைரக்டர்ஸை விரட்டி புதிய டைரகடர்களை அமர்த்தினான், அதிலொரு திருத்தம் இந்த புதிய டைரக்டர்கள் கான்சல் எனும் குழுவில் இருப்பார்கள் அக்குழுவின் தலைவர் தான் என்பதுதான் அத்திருத்தம்

அதாவது நாட்டின் அரசன் அல்ல, மாறாக தலைவன் நெப்போலியன்

அதிகாரம் கிடைத்தபின் நெப்போலியனின் மனம் பிரிட்டனை போட்டு சாத்தவே சிந்தித்தது, ஆனால் அதற்கு முன்பு நாட்டில் பல சட்டங்கள் எழுதவேண்டியிருந்தது

குழப்பமான நாட்டில் பொருளாதாரம் படுத்துவிடும், மோடியின் இந்தியாவே சாட்சி. அப்படி பிரான்சும் படு வீக்கானது

இது அக்கம் பக்கம் தெரியவர, இத்தாலிக்கு குளிரிவிட்டது

நாங்கள் பாப்பரசர் வாழும் புனித இத்தாலி, நெல்சனால் தோற்கடிகபட்ட நெப்போலியனுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம், இனி நாங்கள் பிரான்ஸின் அடிமை இல்லை என அறிவித்தது

எச்சரித்தான் நெப்போலியன், பலன் இல்லை

தலைவன் ஆகிவிட்டால் நெப்போலியன் களம் காணமாட்டான் என முடிவா? என பெரும் படையுடன் ஆல்ப்ஸ் மலையினை கடந்தான்

அடித்த அடியில் அலறியது இத்தாலி, போப்பாண்டவருக்கு ஆளனுப்பினான்

“நான் மறுபடியும் வந்துவிட்டேன், இத்தாலி துள்ள்ளுவதற்கு போப் எனும் பெரும் சக்தி அங்கு இருப்பதுதான் காரணம். இத்தோடு இத்தாலி நிறுத்திகொள்ள வேண்டும்

இல்லாவிட்டால் போப் என்றும் பார்க்கமாட்டேன், புனித மண் எனவும் பார்க்கமாட்டேன், கர்த்தரை விட எனக்கு பிரான்சே முக்கியம்”

போப்பாண்டவரை ஆட்டிவைத்தவர்களில் முக்கியமானவன் நெப்போலியன்

அதன் பின் இத்தாலி வம்பு செய்யவில்லை

இனி எந்த நாட்டை பிடிக்கலாம், பிரான்சுக்கு எப்படி வருமானம் பெருக்கலாம் என அவன் சிந்தித்துகொண்டிருந்தபொழுது அவனுக்கு இன்னொரு பிரச்சினை முளைத்தது

ஆம் இம்முறை பழனிச்சாமிகள் போர்கொடி தூக்கினர்

என்னடா இது, காலில் விழுந்து கிடக்கின்றார்கள். பதவி கிடைத்தவுடன் உரசுகின்றார்கள். இந்த யழ்வு நாற்காலியில் எவனை வைத்தாலும் மாறிவிடுவான் போல‌

இனி வேலைக்காகது, இதில் ஒவ்வொருவனையும் வைத்து அழகு பார்க்க முடியாது

நாமே அமர்ந்தால் என்ன? எவன் எதிர்ப்பான்? மக்கள் நம்மை கொண்டாடும்பொழுது அஞ்ச என்ன இருக்கின்றது?

பிரான்சினை வளர்க்க அவனுக்கு சக்திவாய்ந்த பதவி தேவைபட்டது, அது அல்லாமல் பிரான்சினை உருவாக்க முடியாது என்பதும் புரிந்தது

பெரும் அறிவிப்பினை வெளியிடான் அது மொத்த ஐரோப்பாவினையும் அலற செய்தது, அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்த நேரமது

வருவான் வாமணன்…

 

தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி

தீபாவளிக்கு நடனம் ஆடினார் மோடியின் தாய் : செய்தி

“நான் டிரம்ஸ் வாசிக்க, எங்க அண்ணன் ஊத,

எங்கம்மா ஆட.. குடும்பமே ஒரு கலைகுடும்பம்…”

 
Image may contain: 1 person
Image may contain: 3 people, people smiling
Image may contain: 2 people, people standing
Image may contain: one or more people and indoor

 

ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி

Image may contain: 2 people, people smiling

ராகுலுக்கு முடிசூட்ட தயாராகின்றார் சோனியா காந்தி

உண்மையில் சோனியா வாழ்ந்தது தியாக வாழ்வு. இந்திராவின் வாரிசை வேரறுப்போம் என கிளம்பிய பல கும்பல்கள் சீக்கிய பெண்ணான மேனகாவினை விட்டுவிட்டன. அவர்கள் குறி ராஜிவ் குடும்பத்தை நோக்கியே இருந்தது

இதில் ஈழ சிக்கலும் சேர்ந்தது, ராஜிவின் குடும்பத்தை வேரறுப்பேன் என முதலில் வெறிபிடித்து திரிந்தது ஈழப்போராளி உமா மகேஸ்வரன்

இது போக காஷ்மீர், அசாம் என உள்நாட்டு தீவிரவாதிகளும், யாசர் அராபத்தே எச்சரித்த வெளிநாட்டு சக்திகளும் ராஜிவ் குடும்பத்தை குறிவைத்து அலைந்தன‌

இவை எல்லாவற்றையும் அறிந்து அஞ்சி அஞ்சி வாழ்ந்தவர்தான் சோனியா

ஆனால் பிரபாகரன் முந்திகொண்டான், ராஜிவ் கிழித்தெறியபட்டார்

இன்னொரு பெண் என்றால் அன்றே மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டு கிளம்பியிருப்பாள்

மாமியார், கொழுநன், கணவன் என மூன்றுபேரின் கோரமரணத்தை கண்ட எந்தபெண்ணும் அம்முடிவிற்கே வந்திருப்பாள்

ஆனால் பாரத கலாச்சாரத்தில் தன்னை நிறுத்திகொண்ட சோனியா அப்படி செய்யவில்லை, இந்திய மகளாக நிலைத்தார், அரசியலில் இருந்து ஒதுங்கித்தான் இருந்தார்

ஆனால் காங்கிரஸ் தள்ளாடியது, தடுமாறியது. சரியான நபர் இல்லாமல் நொறுங்கும் நிலையில் இருந்தது

அப்பொழுதுதான் அரசியலுக்கு வந்தார் சோனியா, அவரின் வருகை காங்கிரசுக்கு பேரேழுச்சியினை கொடுத்தது. கட்சி ஆட்சிக்கும் வந்தது

ஆனாலும் பதவியில் அவர் அமரவில்லை, அமர விருப்படவுமில்லை அந்த நாற்காலியில் யார் அமரவேண்டுமோ அவரை அமர்த்தினார்

பல விஷயங்களில் சோனியாவின் அணுகுமுறை பாராட்டதக்கது, மிக நுணுக்கமாக திறமையாக கட்சியினை நடத்தினார்

இத்தேசம் இந்திராவின் மருமகளாகவும் காங்கிரசின் தலைவியாகவும் அவரை மனமார ஏற்றும்கொண்டது

இப்பொழுது 70 வயதை நெருங்கும் சோனியாவின் உடல்நிலை அவ்வளவு சரி இல்லை என்கின்றன செய்திகள்

அந்நிலையில்தான் ராகுல் காந்தியினை தலைவராக்க போகின்றார் என்கின்றார்கள், அநேகமாக இந்திரா நினைவுநாளில் அது அறிவிக்கபடலாம்

அப்படியே பிரியங்காவிற்கு தான் போட்டியிடும் ரேபரேலி தொகுதியினை கொடுக்க போகின்றாராம்

இவை எல்லாம் குறிப்பால் ஏதோ உணர்த்துகின்றன, எதற்கோ தயாராகின்றார் சோனியா, கண்கள் கலங்கும் தருணமிது.

அவரின் வாழ்விலும் , தனிபட்ட விவகாரங்களிலும் எதிர்கட்சி கூட, கொடும்பாவி கூட ஒரு கறை காட்ட முடியாது. நிச்சயம் அது கவனமான தூய வாழ்வு.

மிக உறுதியாக சொல்லலாம், சோனியா வாழ்ந்தது வாழ்வது எல்லாம் தியாக வாழ்வு. “தியாக தலைவி” என்பது சோனியாவிற்கு 100% பொருந்தும்.

ராகுல் வரட்டும், இத்தேசத்திற்காய் தன் சொத்துக்களை எல்லாம் அள்ளி கொடுத்தார் நேரு, தன் உயிரை கொடுத்தார்கள் இந்திராவும் ராஜிவும்

அந்த வம்சத்தில் வரும் ராகுலை வாழ்த்துவோம்

ராகுலை காங்கிரஸ் தலைவராக்கிவிடுவார் சோனியா, ஆனால் அவர் பிரதமர் ஆவாரா? என கேள்விகள் எழலாம்

மோடி என்ன செய்துகொண்டிருக்கின்றார் என நினைக்கின்றீர்கள்?

அடுத்த தேர்தலில் காங்கிரசை பதவியில் அமர்த்தும் அத்தனை விஷயங்களையும் இம்மி பிசகாமல் செய்து கொண்டிருக்கின்றார் மோடி

நிச்சயம் ராகுலை பிரதமர் ஆக்காமல் மோடி ஓயமாட்டார். அந்த நல்ல காரியத்திற்காக மோடி தலமையில் பாஜகவே தேசமெங்கும் பெரும் யாகத்தில் ஈடுபட்டிருக்கின்றது.


 கொடூர சதியில் கணவனை இழந்தும், பெரும் எதிர்ப்புகள் மிரட்டல்கள் மத்தியிலும் இந்தியாவில் பதவிக்கு கூட வராமல் “தியாக வாழ்வு” வாழ்ந்தார் சோனியா என சொன்னால்…

 

மோடியும் சிறுவயதிலே மனைவியினை விரட்டிவிட்டு நாட்டிற்காய் வாழ்ந்தார், அவரை “தியாக தலைவன்” என சொல் என சிலர் கிளம்புகின்றார்கள்

இவர்களை எல்லாம்….

மோடி தியாக தலைவன் என அதானியும், அம்பானியும் அமித் ஷா மகனும் வாய்நிறைய சொல்வார்கள், போய் கேட்டுகொள்

மோடியின் தியாகம் நிச்சயம் அவர்களுக்கானது அல்லவா?, அதனை சொல்லாவிட்டால் அம்பானி, அதானி எல்லாம் நாசமாய் போகட்டும்


இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்?

இன்னும் ஏன் கலைஞரையே திமுகவினர் எதிர்பார்க்கின்றார்கள்? , அவர் இல்லாமல் திமுக நடக்காதா ஹிஹிஹி இதுதான் வளர்ச்சியா ஹோஹோ என சிலர் சிரித்துகொள்கின்றார்களாம், சொல்பவர்களில் பாதி பாஜகவினர் மீதி இம்சை கோஷ்டி.

இதன் பெயர் எதிர்பார்பு அல்ல, அவர் இல்லாவிட்டால் கட்சி அழிந்துவிடும் என்பதல்ல‌

இதன் பெயர் நன்றிகடன்

பாஜக எனும் கட்சியினை வளர்க்க தன் உயிரை பணயம் வைத்த அத்வாணியினை விரட்டிவிட்டு எங்கிருந்தோ வந்த மோடி, யோகி, ராம்நாத் வாழ்க‌ என சொல்லி கொண்டிருப்பவர்களுக்கு நன்றி என்றால் என்னவென்று தெரியுமா?

நிச்சயம் தெரியாது

ஜெயா ஆஸ்பத்திரியில் படுத்த உடனே அடுத்து என்ன செய்வது என அன்றிரவே டெல்லியுடன் உடன்படிக்கை பேசியவர்களுக்கும் நன்றி என்றால் என்னவென்று தெரியுமா?

அது எப்படி தெரியும்? ராமசந்திரனே நன்றிகெட்டுத்தான் தனி கட்சி கண்டார்

வளர்த்த சசிகலாவிற்கு நன்றி கொன்றுவிட்டு இப்பொழுது பதவியில் இருப்பதும் அந்த கொள்கையே

ஆனால் திமுகவினர் நன்றியுள்ளவர்கள். கட்சிக்கு அத்தலைவன் கொடுத்த உழைப்பிற்காய் அனுதினமும் அவனை போற்றும் நன்றிமிக்கவர்கள்

அந்த நன்றியில்தான் அவரை கொண்டாடுகின்றார்களேயன்றி, அவர் இனி வந்து தாங்க போகின்றார் என்பதல்ல..

இன்னொன்று கலைஞர் உழைத்தவர் , இன்னும் உழைக்க துடிப்பவர். இன்று உடல்நலம் ஒத்துழைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் அதிர்வுகளை கொடுப்பவர்

அவ்வகையில் அந்த ஆச்சரிய மனிதரை கொண்டாடுகின்றார்கள்

அது சரி பாஜகாள், அந்த மனிதரை ஏன் வலுகட்டாயமாக ஓய்வெடுக்க சொல்கின்றீர்கள்?

அந்த அளவு அவருக்கு அஞ்சிசாகின்றீர்கள், அவர் பேசதொடங்கினால் உங்கள் பேச்சு நின்றுவிடும், அவர் நடக்க தொடங்கினால் நீங்கள் எல்லாம் ஓடவேண்டும் எனும் பயம்தானே?

அதனை நேரடியாக சொன்னால்தான் என்ன?

உலகிற்கே தெரிந்த இந்த ரகசியம் நீங்கள் மூடிகாப்பதாக நினைத்தால் யாருக்கு தெரியாது?

ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி

ஏழ்மையும், பாகுபாடும் இல்லாததே ராமராஜ்யம் : யோகி

ராமனின் ஆட்சிகாலத்தில் சாதி பாகுபாடு இருந்திருக்கின்றது, ராமனே சத்திரிய திலகம் என்றுதான் கொண்டாடபட்டிருக்கின்றான்

சீதை தீகுளித்து காட்டுக்கு செல்ல ஒரு சூத்திரன் சொன்ன சொல்தான் காரணம் என்கின்றது ராமாயணம்

ஆக பாகுபாடு இல்லா ஆட்சி ராமர் காலத்திலே இல்லை, இவரோ பாகுபாடு இல்லாதது ராமராஜ்யம் என சொல்லிகொண்டிருக்கின்றார்

அப்படியும் சாதிபாகுபாடு என சொல்லவில்லை அல்லவா? அதுதான் யோகி ஸ்டைல்.


கொசுறு

நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் விளக்கம்

அதானே, நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டாம் என அவர் சொல்லவில்லை, குடித்தால் நல்லதல்ல என்றுதான் சொன்னார்.


மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி , திருநெல்வேலி

Image may contain: outdoorகிறிஸ்தவர்கள் மட்டும்தான் தென்னிந்தியாவில் கல்வி வளர்த்தார்கள் என்பது சரியான வாதம் அல்ல. அவர்கள் கல்விக்கான முயற்சிகளை தொடங்கினார்கள் சந்தேகமில்லை

ஆனால் அவர்கள் கல்விநிலையங்களால் பல மாறுதல்கள் நிகழ்வதை கணித்த தென்னக இந்துக்களும் விழித்துகொண்டு கல்வி நிறுவணம் அமைத்தார்கள்

தமிழ் அழிவதையும், சில கலாச்சாரங்கள் அழிவதையும் தடுக்க எண்ணி அவர்கள் செய்த முயற்சி அது.

ஆங்கிலம் கற்கவேண்டும், அதே நேரம் தமிழ் அழியாமல் காக்கபடவேண்டும் என்ற உன்னத நோக்கம் அவர்களது, அப்படி பலர் பல கல்வி நிலையங்களை உருவாக்கியிருக்கின்றார்கள்

கிறிஸ்தவர்கள் தங்கள் மத அடையாளங்களோடு கல்லூரிகள் நடத்தியபொழுது சற்றும் பின்னடையாமல் இந்து கல்லூரிகளும் அக்காலத்திலே நடத்தபட்டிருக்கின்றன‌

இந்துக்களின் குரல் என்பது எப்பொழுதுமே ஓங்கி ஒலித்த தேசமாகவே இது இருந்திருக்கின்றது, இன்று மோடி காலத்தில் மட்டும் குதிக்கின்றார்கள் என்பதல்ல விஷயம்.

அன்றே தங்களை காத்து கொள்ள விழிப்பான சமூகமாகவே அது இருந்திருக்கின்றது.

எத்தனையோ பெரும் மனிதர்கள் கல்விக்காகவும் கலாச்சாரம் மதம் காக்கவும் உழைத்திருக்கின்றார்கள், செட்டி நாட்டு தனவான்களை போல பெரும் பணி செய்திருக்கின்றார்கள்

அவர்களில் ஒருவர் மதுரை திரவியம் தாயுமானவர்

வரலாறு சொல்வதன்படி தமிழ் வளர்த்த நெல்லை பெருமக்கள், சைவ கழகம் எல்லாம் கொண்டிருந்த நெல்லை மக்கள் 1859லே இந்து பள்ளி தொடங்கியதாகவும் பிற்காலத்தில் அது நெருக்கடியில் தள்ளபட மதுரை திரவியமும் அவரின் சகோதர தாயுமானவரும் அள்ளிகொடுத்த பணத்தில் அது மறுவாழ்வு பெற்றதாகவும் ஒரு செய்தி உண்டு

இன்னொரு செய்தி இருவரும் ஒருவரே என்கின்றது.

எப்படியோ அப்படி ஒரு மனிதர் இருந்திருக்கின்றார் என்பது மதிதா இந்து கல்லூரி என பெயர் பெற்றிருப்பதால் தெரிகின்றது.

இவர் யார்? என்ன செய்தார்? அவர் ஏதும் ஆதீன சாமியாரா? இல்லை தனிமனிதனா? என்பது பற்றி தெரிந்துகொள்ள ஆவல்

ஆனால் இன்னும் குறிப்புகள் கிடைக்கவில்லை

நெல்லையில் பல்கலைகழகம் அமைக்கபட்டபொழுது அவர் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், அவரின் தொண்டு அப்படி பாராட்டபடவேண்டியது.

இப்படி ஏராளமான இந்துக்களும் நெல்லை பகுதியில் கல்விபணி செய்தனர், அவர்கள் எல்லாம் எப்படி? ஏன் மறைக்கபட்டனர்?

எத்தனை கல்வி நிலையங்களையோ அக்காலத்தில் உருவாக்கிய மதுரை திரவியம் தாயுமானவர் எப்படி காணாமல் போனார்?

இன்றளவும் அவருக்கு பிறந்தநாளோ இறந்தநாளோ எதுவுமில்லை, யாரும் நினைவு கூர்ந்து பார்த்ததுமில்லை

இவர்களை எல்லாம் மறைத்து கிறிஸ்தவ மிஷினரிகளும் அதனை தொடர்ந்து பகுத்தறிவுவாதிகளுமே எழுத படிக்க சொல்லிகொடுத்தனர் எனும் கருத்துக்கள் வலுபடுத்தபட்டது ஏன்?

எப்படியோ இந்த மதுரை திரவியம் தாயுமானவரை பற்றி தெரிந்தவர்கள் சொன்னால் மிக்க மகிழ்ச்சி

 

தேசத்தின் காவலர்களுடன் நாட்டின் தலைமகன்

Image may contain: one or more people and beard
எவ்வளவு சர்ச்சை இருக்கலாம், சில குறைகளும் இருக்கலாம் ஆனால் பாஜக அரசு நாட்டின் பாதுகாப்புக்கும் அதற்குண்டான விஷயங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாராட்டத்தான் வேண்டும்

இந்த விஷயத்திற்காக மோடியினை பாராட்டலாம், தேசத்தின் காவலர்களுடன் நாட்டின் தலைமகன் தீபாவளி கொண்டாடுவது வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரியது

இந்த படம் போட்டோஷாப் இல்லை என நம்புகின்றேன்

உனக்காய் காத்திருக்கின்றது தமிழகம்

Image may contain: one or more people and people standing

தான் பெற்ற முதல் பிள்ளை வாழ்ந்தோங்கி நிற்பதை காண வந்த தந்தையாக, தான் நீர் ஊற்றி வளர்த்தமரம் வியாபித்து நிற்பதை கண்ட விவசாயியாக கிட்டதட்ட 1 வருடம் கழித்து முரசொலி அலுவலகம் வந்திருக்கின்றார் கலைஞர்

அதனை கண்டாலே ஒரு புது உற்சாகம் பிறக்கத்தான் செய்கின்றது.

நிச்சயம் முரசொலியில் கலைஞர் எழுதியது உலக சாதனை கிட்டதட்ட 75 ஆண்டுகள் ஒருமனிதன் எழுதிகொண்டே இருக்க முடியுமா? அவரால் முடிந்தது.

அந்த மாபெரும் சாதனையினை செய்தவர், அந்த சாதனை கூடத்திற்கு வந்த தருணங்களை கண்டபொழுது ஒருவித சிலிர்பு நெஞ்செமெல்லாம் வருகின்றது

அவர் என்னென்ன நினைத்திருப்பார், என்னென்ன பேச துடித்திருப்பார் என ஆயிரம் நினைவுகள் நமக்கு வந்தாலும், அந்த நினைவுகளில் அவர் மூழ்கியிருப்பார் என்றாலும் கலைஞரின் ஸ்பெஷாலிட்டி வேறு

எந்த நினைவுகளிலும், துயரங்களிலும் இருந்து சட்டென எழும்பி வந்து அடுத்து என்ன செய்யலாம் என்பதை மிக அழகாக திட்டமிடுவார், அது அவருக்கு வாய்த்த வரம்.

இப்பொழுதும் அவரின் மனம் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றித்தான் சிந்தித்துகொண்டிருக்கும்.

கலைஞர் ஓரளவு நலம்பெற்றுவிட்டார் என்பதை காட்டும் விஷயம் இது, அந்த நலம் கொடுத்த மருத்துவத்திருக்கும் அவர் நம்பாத கடவுளுக்கும் நன்றி

அவரால் பேசமுடியுமா, எழுத முடியுமா என்பது தெரியவில்லை, அது எப்பொழுது முடியும் என்பதும் சொல்லபடவில்லை.

ஆனால் அவரின் ஒரு புன்னகை போதும், ஒரே ஒரு புன்னகை போதும். அது ஆயிரம் யானை பலத்தை திமுகவினருக்கு கொடுக்கும்.

அந்த பலத்தை கொடுத்துவிடு தலைவா, தமிழகத்தை ஒரணியில் திரட்ட உன்னையன்றி யாருண்டு?

உனக்காய் காத்திருக்கின்றது தமிழகம்