ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றி ஆதாரங்கள் திரட்டுகிறோம்-பூர்வா ஜோஷிபுரா


ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றி ஆதாரங்கள் திரட்டுகிறோம்-பூர்வா ஜோஷிபுரா
x
தினத்தந்தி 21 Feb 2017 9:29 AM GMT (Updated: 21 Feb 2017 9:37 AM GMT)

ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் 'மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாகதாக பீட்டாவின் இந்தியத் தலைவர் பூர்வா கூறினார்.

சென்னை


தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது. தடைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மாடுகள் அவிழ்த்துவிடும் வாடிவாசல்கள் களை இழந்து காட்சியளித்தன.

இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டம் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை தகர்ந்தது. ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடக்கத் தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 5–ந்தேதி அவனியாபுரத்திலும், 8–ந்தேதி தொட்டப்பநாயக்கனூரிலும், 9–ந்தேதி  பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டின.தொடர்ந்து பல்வெறு இடங்கலிலும் ஜல்லிக்ட்டு போட்டிகள் நடத்தப்பட்டன

இந்த நிலையில்  பீட்டாவின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் 'மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாகதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் சம்ர்ப்பிபோம் எனறும்' தனியார் தொலைக்காட்சிக்குப் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story