சமூக ஊடகங்களை பயன்படுத்தி பிரச்சனைகளை கூற வேண்டாம் : இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

சமூக ஊடகங்களை பயன்படுத்தி குறைகளை வெளிப்படுத்தும் படையினர் தண்டிக்கப்படலாம் என்று இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இதுபோன்ற செயல் உற்சாகத்தைக் குறைக்கும் என்றும், பிரச்சனைகளை தீர்த்துவைக்க ராணுவத்திடம் சொந்த அமைப்புமுறை இருக்கிறது என்றும் தளபதி பிப்பின் ராவத் கூறியுள்ளார்.

இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்த காணொளி ஒன்றில் இந்திய ராணுவத்தை சேர்ந்த படையினர் ஒருவர், உயரதிகாரிகளின் துணிகளை துவைக்க, ஷூக்களுக்கு பாலிஷ் போட மற்றும் நாய்களை நடக்க அழைத்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார். அதனைத்தொடர்ந்தே, தளபதி இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி படையினர் இதுபோன்று தொடர்ந்து புகார் கூறி வந்தால் அது ராணுவ ஒழுக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக காணொளிகளை அதிகாரிகள் பதிவேற்றியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்