மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார் மா.நடராசன்

Image may contain: 2 people

மறுபடியும் களத்தில் இறங்கிவிட்டார் மா.நடராசன், சீறியபடி வந்து நிற்கின்றார்.

உடல்நலம் குன்றி மாற்று கல்லீரல் பொருத்திய நடராசன் தன் பேட்டியினை வழங்கியிருக்கின்றா, கல்லீரல் கொடுத்தவனுக்கு நன்றி எல்லாம் அதில் இல்லை,மாறாக பலரின் ஈரலை பிடுங்கும் வகையில் பேட்டி இருக்கின்றது இப்படியாக‌

“நான் இன்னும் இந்தியா முழுக்க செல்வாக்கோடு இருக்கின்றேன், ஒரு போன் போட்டாலே நான் நினைத்ததை சாதிப்பேன்

இந்த ஜெயலலிதா சாவுக்கு எதற்கு விசாரணை ஆணையம். தீர்ப்பு வந்தும் என்ன கிழித்துவிட போகின்றார்கள்? எல்லாம் வீண் குழப்பம்

ஜெயலலிதாவினை நானே உருவாக்கினேன். அவர் வாசித்தது எல்லாம் என்னுடைய எழுத்து, அவர் அறிவித்த திட்டமெல்லாம் என்னுடைய வியூகம். அதனை பின்பற்றியதாலே அவர் வெற்றி கண்டார்

நான் தமிழகத்தில் மகா செல்வாக்கனவன், என் மனைவிக்கு பரோல் கிடைத்ததும் தமிழகம் முழுக்க இருவரும் சுற்றுபயணம் செய்வோம், இந்த அரசை விடமாட்டேன்” என சீறி எழுந்திருக்கின்றார்

அன்னாரின் பேட்டியினை கவனித்தால் சில தொணிகள் தெரியும்

முதலாவது ஜெயா எப்படி செத்தால் என்ன? என்ன முடிவு என்றாலும் யார் கேட்க போகின்றார்கள்? எனும் அலட்டல்

இரண்டாவது விஷயம் ஜெயா எல்லாம் விஷயமே அல்ல, நானே உருவாக்கினேன், என் சொற்படி கேட்டால் யாரும் முதல்வராகலாம் என பழனிச்சாமிக்கு மிரட்டல்.

கடைசி விஷயம் இந்தியா முழுக்க இன்னும் பலரின் தொடர்பில் இருக்கின்றார் நடராசன், அது அரசியலா? கள்ள கடத்தலா? தீவிரவாதமா, நக்சலா என தெரியவில்லை . ஆனால் மத்திய அரசுக்கான மிரட்டல்

இதற்கெல்லாம் காரணம் ஆர்.கே நகர் கொடுத்த வெற்றி, தினகரனை மனமார வரவேற்றது போல தமிழக மக்களும் தன்னையும் தன் மனைவியினை வரவேற்பார்கள் அல்லது வரவேற்க வைக்க முடியும் என நம்புகின்றார் போல‌

ஆக தமிழக மக்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகின்றது, எப்படி பார்த்தாலும் வசூல் மழை கொட்டபோகின்றது, அதனைத்தான் நடராசன் சூசகமாக சொல்கின்றார்

ஆனால் சில விஷயம் உதைக்கின்றது

தான் சொல்லிகொடுத்ததை செய்துதான் ஜெயா முதல்வர் ஆனார் என்றால், இவர் இன்னும் பல முதல்வரை உருவாக்கி இருக்கலாமே, ஏன் ஜெயாவினையே வைத்திருந்தார் என நாம் கேட்க கூடாது

ஆக ஜெயா ஒன்றுமே இல்லை என மக்கள் மனதில் பதிய வைக்க கிளம்புகின்றார் நடராசன், பார்க்கலாம்

தினகரன், திவாகரன் , விவேக் என ஆளாளுக்கு வரிசை கட்டும் களத்தில் நடராசன் வராமல் அமைதிவராது என்பது இன்னொரு கோணம்

நடராசன் பேட்டியில் இருந்து ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்

“அய்யா ஒரே போனில் நினைத்ததை சாதீப்பீரா? ஒரு போன் போட்டு சசிகலாவினை வெளியில் கொண்டு வந்தால் என்ன? என்றெல்லாம் கேட்க மாட்டோம்

மாறாக இந்த இம்சை பிடித்த ஆட்சியினை ஒரே போனில் கலைத்துவிட கூடாதா?”

எப்படியோ, அன்னார் ஒரே போனில் நினைத்ததை சாதிப்பாரம். வருமான வரிதுறையினை அனுப்பி அவர் கையில் இருக்கும் போனை வாங்காமல் மத்திய அரசோ, பழனிச்சாமியோ நிம்மதியாக இருக்க முடியாது என்பது மட்டும் புரிகின்றது.

 

இறந்தவரை பழிப்பது அறிவுடமை ஆகாது

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனை பற்றி பேச கூடாது என்பது தமிழர் மரபு, அதுவும் அவன் இறந்த அன்று அவன் இறுதிசடங்கு நடக்கும்பொழுது பழிப்பது எல்லாம் மானிடர் செய்யும் விஷயம் அல்ல‌

கலைஞரை அவர் சில இடங்களில் கண்டித்திருக்கலாம், கலைஞர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆயினும் அதனை சொல்ல இது நேரம் இல்லை

கலைஞர் நடமாடிகொண்டிருந்தால் ஞாநி உடலுக்கு விழுந்த‌ முதல் மாலை கலைஞரிடம் இருந்துதான் வந்திருக்கும் என்பதை மறக்காதீர்கள்

தமிழக சமூக அவலத்தை, அரசியலை சாடி எழுதிய ஒரு சிந்தனை மிக்க எழுத்தாளன் இறந்திருக்கின்றான், அவனுக்காக அழுங்கள்.

அழாவிட்டாலும் அமைதி காத்திருங்கள்

மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, எதிர் முகாமில் இருப்போருக்கும் அறிவு உண்டு என்பதை மறக்க வேண்டாம்

சில திமுகவினர் செய்யும் அழிச்சாட்டியம் அதிகம்.

அன்பர்களே சாவு எல்லோருக்கும் பொதுவானது, அதில் இன்னொருவன் செத்திருக்கும் நேரம் கண்டதை எழுதுவதெல்லாம் அறிவுடமை ஆகாது

பொங்கல் மதங்களை தாண்டியது

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கலை கொண்டாடுவது ஏதோ ஆச்சரியம் போல சிலர் பேசிகொண்டிருக்கின்றார்கள்

இதில் என்ன ஆச்சரியம்?

கத்தோலிக்கம் உலகம் முழுக்க அந்தந்த மக்கள் தங்கள் கலாச்சார அடிப்படையில் கிறிஸ்துவத்தை பின்பற்ற அனுமதிக்கின்றது

கோவிலில் கொடிமரம் வைத்தல், தேர் இழுத்தல், முளப்பாரி, தவில் , நாதஸ்வரம், சந்தணம், மாலை சாற்றுதல் என எல்லா தமிழர் கலாச்சாரத்தில் இணைந்துதான் இங்கு அது நிலைத்திருக்கின்றது

ஆக அந்த ஆலயங்களில் பொங்கல் விழா நடப்பது ஆச்சரியமே அல்ல, நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்

பொங்கல் மதங்களை தாண்டியது

கத்தோலிக்கம் இவைகளை ஏற்றுகொள்ளும், பைபிளை கடவுளுக்கும் மேல் பலபடி தூக்கி பிடிக்கும் சில கும்பல்கள் இதனை ஏற்றுகொள்ளாது

அவர்கள் பொங்கல் கொண்டாடினால்தான் ஆச்சரியம்

அவர்களில் பல வகை உண்டு, சிலது கிறிஸ்மஸ் கொண்டாடும், ஈஸ்டர் கொண்டாடும் பைபிளில் கொண்டாட சொல்லி தேதி கொடுத்திருக்கின்றார்களா என்றால் ஹிஹிஹி வேற எப்படி புதுசட்டை போடுவது என சொல்லி சென்றுவிடும்

இன்னொரு கோஷ்டி உண்டு, அது ஆபத்தானது

பைபிளில் சொல்லபடவில்லை என ஒரு பண்டிகையும் கொண்டாடாது, அடேய் பழைய ஏற்பாட்டு பாஸ்கா கொண்டாடு என்றாலும் கொண்டாடாது. கம்மென்று இருக்கும், ஒரு மாதிரி சைக்க்கோ வகையறா

ஆனால் வருமானத்தில் பத்தில் ஒருபங்கு காணிக்கை வாங்கிவிட வேண்டும் என்பதில் மட்டும் பழைய ஏற்பாட்டினை பிடித்து தொங்கி வசூலிக்கும்

இப்படியாக கிறிஸ்தவரில் பலவகை … ஒவ்வொன்றும் ஒரு வகை…..

தமிழிசை மைண்ட் வாய்ஸ்….


Image may contain: 4 people, outdoor
“மாட்டுப் பொங்கல், உனக்கு தாமரை இலை தரத்தான் ஆசை ஆனால் நீ தமிழக மக்கள் மாதிரியே வேண்டாம்னு சொல்லுவ, அதுனால இந்தா புல்லு

உனக்கும் தமிழ்நாட்டில மரியாதை இல்ல, எங்க கட்சிக்கும் மரியாதை இல்ல‌

என்ன செய்ய, உனக்கு மட்டும் வோட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?

அங்க ஒரு கோஷ்டிக்கு இரண்டு இலை எல்லாம் கொடுத்துபார்த்தோம் கொஞ்சமும் பிரயோசனம் இல்ல, உனக்கு கொடுக்குற புல்லாவது பிரயோசனமா இருக்காண்ணு பார்ப்போம்.”

(தாமரை மலரும்ணு ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை சொல்லும் இந்த அக்கா, கடைசியில் தாமரை அக்கா ரவிக்கையில்தான் மலர்ந்திருக்கின்றது

ஆக டெய்லருக்குத்தான் இவ்வளவு நாளும் எச்சரிக்கை செய்திருக்கின்றது அக்கா..)


Image may contain: 2 people“பங்காளி அங்க பாத்தீங்களா, இரட்டை இலைய தாமரை கூட சேர்த்து அந்தம்மா ஜாக்கெட் கையில போட்டிருக்கு

ஆமாம் பங்கு, நம்ம அவங்க கையில சிக்கிட்டோம்னு தமிழகத்துக்கே சொல்றாங்க போல, என்னன்னு கேட்ருவோமா?

கேட்டா மட்டும், இரட்டை இலையினை உங்ககிட்ட தந்தோம், தேர்தல்ல‌ என்ன கிழிச்சீங்க, எங்க கிட்டயே இருக்கட்டும்ணு சொல்வாங்க , ஒண்ணும் பேச முடியாது.”


வீர‌ தமிழன் என்றால் ….

Image may contain: 3 people, people smiling

“வருத்தபடாத கயல்விழி, அத்தான் ஜல்லிகட்டு காளை எல்லாம் அடக்க மாட்டேன், வீர‌ தமிழன் என்றால் காளையினை அடக்கு என ஒரு பயலும் கேட்கவும் மாட்டான்

நீங்க அதுக்கெல்லாம் போக மாட்டீங்கண்ணு தெரியும், ஆனா ஓரமா நின்னு என் உறவே, என் இனமே , தமிழ் காளையே, வந்தேறி மாடேன்னு பழக்க தோழத்துல கை கால் எல்லாம் நீட்டி கத்துனா காளை ஓடிவந்து மிதிக்காதா?”

 

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : குருமூர்த்தி

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் : குருமூர்த்தி

ரஜினியின் வோட்டு வங்கி இன்னும் தெரியாது, ஆனால் சர்வ நிச்சயமாக 40% எல்லாம் இருக்கமுடியாது, அதற்கும் மிக குறைவுதான், அவர் தேர்தலை சந்தித்தால்தான் உண்மை தெரியும்

பாஜக பற்றி உலகிற்கே தெரியும், வேட்பாளர் கூட கிடைக்காத கட்சி அது, கிடைத்தவருக்கு தேர்தல் கமிஷன் அபராதம் செலுத்தாமல் விட்டதே பெரிய விஷயம், டெப்பாசிட்டை மட்டும் பிடுங்கிகொண்டார்கள்

இதில் ரஜினி பாஜகவினை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை குருமூர்த்தி இப்படி வைக்கின்றார், அதுதான் உண்மை

இந்த பாஜக ஏன் தமிழகத்தில் வீணாகபோகின்றது என்றால், வடக்கத்திய தன்மையினை இங்கே புகுத்த முற்படுகின்றது. இந்துக்களுக்கு தாங்கள்தான் ஏக போக உரிமையாளர் என்று இந்த எச்.ராசா இன்னும் சில அழிச்சாட்டியங்கள் கிளம்புவதை தமிழகத்தார் ஏற்றுகொள்ளமாட்டார்கள்

பொதுவில் இந்துமதம் சாந்தமானது. அதனை பின்பற்ற எந்த கட்டுபாடோ, இறுக்கமோ தேவையே இல்லை

பல மணங்கள் புரியவும், எதையும் உண்ணவும் அது தடை செய்யவில்லை. அவதாரங்களாக வந்து இந்து தெய்வங்களே அப்படி வாழ்திருக்கின்றன‌

அந்த மதத்தின் சிறப்பே அதில் கடுமையான நிர்பந்த கட்டுபாடுகள் இல்லை என்பது, மனமார சாந்தமாக வழிபடுவதே அதன் ஸ்பெஷலிட்டி

அதனை வலுகட்டாயமாக பின்பற்ற வேண்டிய மதமாக, ஒரு பயங்கரவாத மதமாக, மசூதிக்க்கும் தேவாலயத்திற்கும் ஆபத்தான மதமான பிம்பம் போல பதியவைப்பது சரியல்ல‌

நல்ல இந்துக்களாக, உண்மையான இந்துகொள்கையுடன் இருந்தால் நிச்சயம் அது வளரும் அதற்கு ரஜினியும் தேவை இல்லை , கமலஹாசனும் தேவை இல்லை

இந்துமதத்தை அதன் இயல்பிலே விடுங்கள், தானாக வளரும்.

மாறாக பார்ப்பண அதிகாரம், மனுநீதி, வலுகட்டாயமான காவி போன்றவற்றுடன் நாங்கள்தான் இந்துமதத்தின் ஸ்பெஷல் ஏஜென்ட் என சொல்லிகொண்டிருந்தால் ரஜினி என்ன? சாட்சாத் அந்த பகவானே வந்தாலும் தமிழகத்தில் பாஜக வளராது

இவர்கள் கட்சியினை வளர்க்காவிட்டால் கூட‌ சிக்கலே இல்லை மாறாக கலவரத்தை உண்டாக்காமல் இருந்தாலே போதும்

ரஜினி எனும் ஆட்டை தேடி கத்தியோடு அலைகின்றார்கள், ரஜினிதரப்பு எச்சரிக்கையாய் இருப்பது நல்லது

இல்லாவிட்டால் “இங்கு யாகம் நடக்கின்றது, பாஜக வளர யாகம் நடக்கின்றது, அதில் எரியபோகும் விறகு நீர்” என ரஜினியினை உள்ளே தள்ளும்பொழுது அவருக்கு புரியும்.

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி

தாய் மண்ணிற்கு வர காத்திருப்பது ஒருவிதமான வலி, அதுவும் டிக்கெட் வந்துவிட்டால் அதன் பின் உண்ண தோன்றாது, உறக்கம் வராது நினைவுகள் அங்கே சுற்றிகொண்டே இருக்கும்

ஒவ்வொரு முறையும் கிளம்பும்பொழுது ஆயிரம் திட்டம் இருக்கும், இம்முறை பலரை சந்திக்கவேண்டும் பல இடங்களை பார்க்க வேண்டும் என கடும் திட்டமிடல் உண்டு

செங்கோட்டை முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைவரை குறித்து வைத்துவிட்டுத்தான் வருவது, ஆனால் வந்து தாயின் முகம் கண்டுவிட்டால் எல்லாம் மறந்துவிடும், ஒரு அடி நகர மனம் வராது, நொடியில் கழிந்துவிடும் விடுமுறை

சென்றவுடனும் அழவேண்டும் , பிரிந்து வரும்பொழுதும் அழவேண்டும்

இதனால் இந்நாள் வரைக்கும் உறுதியளித்த யாரையும் சந்திக்க முடியவில்லை, நினைத்த இடத்திற்கு செல்லவும் முடியவில்லை

நம்புவீர்களோ இல்லையோ பலமுறை பார்க்க நினைத்த பத்மநாபபுரம் அரண்மனைக்கு கூட பல வருடமாக செல்லவில்லை

இம்முறை சென்னைக்கு விஜயம், அந்த ஊரில் 2002ல் கால்வைத்தேன், 2 மாதம் தங்கி இருந்தேன். படித்து முடித்த காலங்கள்

முட்டைக்குள் இருந்து வந்த குஞ்சு போல அந்த ஊரில் திருதிருவென சுற்றி இருக்கின்றேன், அன்று சென்னைவாசிகள் தமிழை கேட்டேன் அதிலொன்றும் ஆச்சரியமில்லை

ஆம் அவர்கள் ஆங்கிலத்தை அப்படியே தமிழாக்கம் செய்வார்கள், ஆங்கிலத்தில் நீ, நீர், நீவிர் என எல்லாவற்றிற்கும் என்ற வார்த்தைதான், அதை அப்படியே தமிழாக்கம் செய்து “வா”, “போ” ,”இந்தா புடி”, “குந்து” என தமிழில் பேசிகொண்டிருப்பவர்கள் சென்னைவாசிகள், அதில் ஒரு ரசனையும் இருந்தது.

அன்றே வேலை தேடுகின்றேன் என சொல்லிவிட்டு மியூசியம் முதல் கோட்டை வரை பல வரலாற்று புகழ்மிக்க‌ இடங்களை பார்த்துவிட்டேன், அதில் பரங்கிமலை தியேட்டரும் ஒன்று

அண்ணா கல்லறைக்கு சென்றேன், ராமசந்திரன் கல்லறை அருகில் இருந்தது, அங்கு செல்லாமல் அவரை பழிவாங்கினேன். என்னால் முடிந்தது அதுதான்

இன்னும் பல இடங்களுக்கு செல்லும் திட்டம் இருந்தது ஆனால் பல நெருக்கடிகளால் ஓடிவிட்டேன்

அதன் பின் பல்லாண்டுக்கு பின் விமானம் ஏற வந்ததோடு சரி, அப்பக்கம் வரவே இல்லை

அந்த சென்னைக்கு வரும் அவசியத்தை என்பவர் ஏற்படுத்திவிட்டார் Jpr Rayan, அவர் உறவினர் ஆனால் கொஞ்ச தூரம்.

ஒரு சீனபடத்தில் ஒரு காட்சி மறக்க முடியாதது. 1940களில் நடக்கும் கதை, சீனாவில் புரட்சி நடக்கும் குட்டி இளவரசனை கம்யூனிஸ்டுகள் தூக்கி எறிவார்கள் அவன் எங்கோ சென்றுவிடுவான் 1980களில் திரும்பவருவான், அவன் வளர்ந்த அரண்மனைக்கு வருவான்

வந்து இதோ இது என் அறை இங்குதான் நான் உறங்கினேன், இது என் தந்தையின் அரியாசனம், இது என் வீடு என கதறுவான். ஆனால் கம்யூனிஸ்டுகள் இது இப்பொழுது நாட்டு சொத்து என சொல்லி விரட்டுவார்கள்

அந்த கதைக்கும் இவருக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை, இவரும் சில கம்யூனிஸ்ட் கொள்கைவாதிகளால் சென்னை வந்தவர்

அவரின் திருமணத்தில் கலந்துகொள்ள அன்னையார் உத்தரவு

இதற்காக சென்னை வந்துவிட்டு பலரை சந்திக்க திட்டமிருக்கின்றது, இப்பொழுது பல நண்பர்கள் அழைத்துகொண்டிருப்பதால் உற்சாகமாக வரலாம்.

மதித்து அழைப்பவர்களை பார்த்துவிட வேண்டும்.

பலரை சந்திக்கவும், பல இடங்களுக்கு செல்லவும் திட்டமிருக்கின்றது, சென்னை பழமையும் புதுமையும் கலந்து மின்னும் நகரம் என்பதால் ஏராளமான இடங்கள் இருக்கின்றன‌

முடிந்த அளவு எல்லோரையும் சந்திக்கலாம், சந்திக்க வேண்டும்

பார்க்க வேண்டிய முகங்கள் என எண்ணும்பொழுது மனதிற்குள் முதலில் வருவது கலைஞர் முகம்,

அவரை பார்க்காமல் சென்னையினை விட்டு திரும்புவது பூமியில் பிறந்துவிட்டு சூரியனை பார்க்காமல் வாழ்வது போன்றது

கலைஞரை திமுகவினர் மட்டும்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை , அவரை பற்றி அறிந்த யாரும் பார்க்கலாம் என்பது அவரின் அரசியல் தத்துவம்

அதனை அறிந்த திமுகவினர் உதவுவார்கள் என நம்புகின்றோம், , பார்க்கலாம்

விரைவில் சங்கம் சென்னை நோக்கிய தன் பயணத்தை தொடக்க இருக்கின்றது.

தலைவியினை பார்த்து சங்க கொள்கையினை விளக்கலாம், வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை.

முடியாவிட்டால் அவரின் வீடு அமைந்திருக்கும் பகுதியான சாந்தோம் ஆலயத்தில் தலைவிக்காக திருப்பலி ஒப்புகொடுத்துவிட்டு சந்தோஷமாக திரும்பலாம்

ஞாநி சங்கரன் காலமானார் : ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 1 person, close-up

தமிழக பத்திரிகையாளர்களின் முக்கியமானவரான ஞாநி சங்கரன் காலமானார் என்பது பெரும் வருத்தமளிக்கும் செய்தி

அவரின் எழுத்துக்களும், அவர் எழுப்பிய கேள்விகளும் தனித்துவம் வாய்ந்தவை, அதனால் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்தார்.

உண்மையினை எழுதியதால் பல பத்திரிகைகள் அவரை விரட்டின, அவரோ அஞ்சாமல் தனியே எழுதிகொண்டிருந்தார்

நாடக உலகிலும் அவரின் பங்களிப்பு உண்டு

நிச்சயமாக சொல்லலாம், ஒரு நல்ல பத்திரிகைகாரன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தார், எதற்கும் அவர் அஞ்சவில்லை.

பெரும் பொய்களும் இன்னும் பல அழிச்சாட்டியங்களும் வரும் பத்திரிகை உலகில் இறுதிவரை உண்மையினை உள்ளபடி எழுதிகொண்டிருந்தவர்

இந்த மக்களை நம்பி ஆம் ஆத்மி வேட்பாளராக தேர்தலில் எல்லாம் இறங்கினார், தினகரன் போன்றோர்கள் வெல்லும் தேர்தலில் இவர் வென்றிருந்தால்தான் அவமானம்

அவர் தோற்றது அவரின் தனிபட்ட கவுரவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

காலத்தால் முந்திவிட்டார், இணைய தொடர்புள்ள இக்காலத்தில், எந்த எழுத்தாளனும் ஊடக பலம் இல்லாமல் தன் கருத்துக்களை துணிந்து சொல்லும் இக்காலத்தில் எழுத வந்திருந்தால் பெரும் புயலாக வீசியிருப்பார்.

“என்னை சந்திப்பவர்கள் எல்லாம் என் சொந்த ஊரில் கோவில் நிதி, கிணறு நிதி என்கின்றார்கள், ஒருவருக்காவது ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை ..” என்ற அந்த வரிகள் மறக்க முடியாதவை

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 

அண்ணாமலை : மறு விமர்சனம்

Image may contain: 2 people, sunglasses, selfie, child, close-up and text

பொங்கலுக்கு என்னதான் சிறப்பு படங்கள் பார்த்தாலும் “அண்ணாமலை” படம் பார்த்தபின்புதான் பொங்கல் கொண்டாடிய திருப்தி இருந்தது

அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ப்ரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள்மா.

மாடும் பாலுமாக சுற்றிகொண்டிருந்த அவள் கணவன் நண்பனால் ஏமாற்றபட்டு நடுதெருவிற்கு வந்தபின்னால் அவனோடு இருந்து அவனின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு அவனை தொழிலதிபர் ஆக்கி அவன் சவாலில் வெல்ல வைக்கின்றாள் என்பதுதான்

அந்த இளம்பெண்ணை சுற்றித்தான் கதை களம், அவள் பெரும் படிப்பு படித்தவள் ஆனால் ஒரு அப்பாவியினை காதலித்த பாவத்திற்காக அவனோடு மாடு மேய்கின்றாள், பால் கறக்கின்றாள், சாணி அள்ளுகின்றாள், வறட்டி தட்டுகின்றாள், பால் கோவா கிண்டுகின்றாள்

அதுவல்லாமல் தன் மகள் எதிரியின் மகனை காதலிக்கின்றாள் என்றவுடன் அந்த பால்கார கணவன் பக்கமே நிற்கின்றாள்

அவன் ஊதிதள்ளும் சிகரெட்டில் அவளின் உழைப்பும் இருக்கின்றது, ஆனால் கொஞ்சமும் அந்த காசு புகையாய் போவதில் அவள் கவலையடவில்லை, கண்டிக்கவில்லை.

அவனின் மகிழ்சி அவளுக்கு அவ்வளவு முக்கியம்

கணவனின் சவால் போராட்டத்தில் கனவில் மட்டுமே பழம் நினைவுகளுடன் தன்னை சமாதானபடுத்துகின்றாள், இப்படியாக அப்பெண்ணின் பாத்திரத்தை சுற்றியே கதை நகர்கின்றது.

இந்த பால்காரன் வேடத்தில் ரஜினி என்பவர் நடித்திருந்தார், நிச்சயமாக அது ராமராஜனுக்கு பொருத்தமான வேடம் அவர்தான் நடித்திருக்க வேண்டும், ஆனால் ரஜினிக்கு கொடுத்துவிட்டார்கள்

அந்த கதையினை தாங்கி நிற்கும் இளம்பெண் வேடத்தில் தலைவி குஷ்பு பின்னியிருந்தார். அவரை தவிர யாரும் அந்த கனமான வேடத்தை சுமக்க முடியாது.

காதலில் விழுவது, அவன் பால்காரன் என ஏமாற்றம் அடைந்தாலும் தமிழர் பண்பாட்டுபடி அவனே கணவன் என ஏற்று கொள்வது, மாட்டு பண்ணையில் கஷ்டபடுவது, மாமியாரை மதிப்பது, கணவனின் லட்சியம் நிறைவேற உழைப்பது என அத்தனை வேடங்களிலும் பின்னி இருந்தார்

அதுவும் கிளைமேக்ஸில் கணவன் தன் சவாலில் வென்றுவிட்ட பின்னாலும், நண்பனின் சொத்துக்களை ஒப்படைக்கும்பொழுது அவனின் நல்ல‌ குணத்தையும் அவன் வென்றுவிட்ட கர்வத்தையும் அப்படியே தன் முகத்தில் காட்டும் போது மிக சிறந்த நடிப்பினை கொடுத்திருந்தார்.

விருது கொடுக்க வேண்டிய நடிப்பு, ஆனால் பாவி உலகம் கொடுக்கவில்லை.

நிச்சயம் அது குஷ்பு படம், பல காட்சிகள் அவரை சுற்றி இன்னும் வைத்திருக்க வேண்டும், அவர் மாட்டுபண்ணையில் கஷ்டபடும் காட்சி, குழந்தை வளர்க்க சிரமபடும் காட்சி எல்லாம் டைரக்டர் காட்டவில்லை

அந்த பாவத்திற்கு பின்னால் பாபா படத்தில் மொத்தமாக வாங்கி கட்டினார் சுரேஷ் கிருஷ்ணா, பின் ஆண்டவன் என ஒருவன் இருக்கின்றான் அல்லவா? விடுவானா?

தலைவி படம் பார்த்தால்தான் பொங்கல் கொண்டாடிய திருப்தியே வந்தது

அதில் ஒரு பாடலில் இஸ்ரேலிய மோஷே தயான் ஸ்டைலில் ஒற்றை கண்ணோடு வந்து நின்றார் ரஜினி கொஞ்சமும் ஒட்டவில்லை

ஆனால் வெள்ளை ஆடையில் குஷ்பு வந்தபொழுது சாட்சாத் யூத பெண்களின் தெய்வீக அழகு தெரிந்தது

ஆக இந்த படத்தை பலமுறை பார்த்து மகிழ்ந்து பொங்கல் நாட்களை மகா சிறப்பாக கொண்டாட சங்கம் முடிவெடுத்திருக்கின்றது.

 

மாட்டுப் பொங்கல் ராமராஜ்….